ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-எம்பி. மொத்த எண்ணிக்கை 8-12 ஆனது

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் கடந்த வாரம் ஜெயலலிதா நினைவகத்தில் அரை மணி நேரம் செய்த தியானம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. ஆட்சியை பிடிப்பது யார்? என்ற அதிகார போட்டியின் கிளைமாக்ஸ் நாளை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு 7 எம்.எல்.ஏக்களும், 11 எம்பிக்களும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும் இதுவரை ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் சற்று முன்னர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதேபோல் மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களும் முதல்வருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். எனவே ஓபிஎஸ் அணிக்கு 8 எம்.எல்.ஏக்களூம், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வெளியே வந்தால் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று அதிமுகவின் தொண்டர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

More News

நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள் நிலையில் இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது.

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்-ராகரா லாரன்ஸ் சந்திப்பு

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு என்று விடை கிடைக்கும் என்று தமிழக மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக தலைவர்கள் சசிகலாவுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நாளை தீர்ப்பு உறுதி. அதிகாரபூர்வமான தகவல்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை காலை 10.30 தீர்ப்பு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது...

ஆளுனருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய அதிரடி யோசனை

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது...

தமிழக உளவுத்துறை தலைவர் திடீர் மாற்றம்

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் திடீரென மாற்றப்பட்டுள்ளார்...