ஈசிஆர் ரிசார்ட்டில் நடப்பது என்ன?

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

ஒருபக்கம் அடுத்த முதல்வர் யார் என்ற ரேஸில் முந்தப்போவது ஓபிஎஸ் அவர்களா? சசிகலா அவர்களா? என்ற பரபரப்பில் தமிழகமே இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கு, எப்படி உள்ளார்கள் என்பது குறித்து வெளிவந்த தகவல்களை பார்ப்போம்.

ஈசிஆரில் உள்ள ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டில் உள்ள அனைத்து அறைகளையும் அவர்கள் எந்தவித பணமும் கொடுக்காமல் ஆக்கிரமித்து கொண்டதாக ரிசார்ட் மேனேஜ்மெண்ட் ஒருபக்கம் புலம்புகின்றனர்.

இன்னொரு பக்கம் எம்.எல்.ஏக்கள் கூண்டுக்கிளியை போல அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம். அவர்களுக்கு தேவையான உணவுகளை வாங்க அவர்களுடைய டிரைவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்களாம்.

அதுமட்டுமின்றி எம்.எல்.ஏக்கள் ஒருசிலருக்கு மதுபானங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், சசிகலாவுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரிசார்ட்டில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், ஏன் குறைந்தபட்சம் அவர்கள் செல்போனைகூட உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 75 நாள் அப்பல்லோ போல இந்த ரிசார்ட் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் எப்போது ரிசார்ட்டை விட்டு செல்வார்கள், இன்று இரவும் அங்கேயே தங்குவார்களா? என்பது உள்பட எந்த விபரமும் ரிசார்ட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி யாருக்குமே தெரியாத புதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

மன உளைச்சலால் மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை

நடிகைகளின் வாழ்க்கை முறையை வெளியில் இருந்து பார்க்கும்போது ஆடம்பரமாக தெரிந்தாலும், பல நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுடன் தான் இருந்துள்ளார்கள் என்பது அவ்வப்போது வரும் நடிகைகளின் தற்கொலையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சில்க் ஸ்மிதா உள்பட பல நடிகைகள் தற்கொலை செய்துள்ள நிலைய&#

சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு அதரிச்சி தரும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது.

சென்னை வந்தார் கவர்னர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்றுமுன் சென்னை வந்து இறங்கினார்.

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.

மதுசூதனை தொடர்ந்து இன்னொரு முக்கிய அமைச்சரும் ஆதரவு. ஓபிஎஸ் அணி உற்சாகம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் வரவால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கியுள்ள..