சசிகலாவுடன் பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட திரையுலக பிரபலங்கள் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்படத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கலந்துகொண்டு துவக்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ்குமார், ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதேபோல் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத் தலைவர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கட்ரகட பிரஜாத், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்பட பலர் சசிகலாவை நேரில் சந்தித்தனர்.

More News

முதல்நாள் வசூலில் 'கபாலி', 'தெறி'யை அடுத்து சாதனை படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கிய ஐடி ஊழியர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கிட்டத்தட்ட  தமிழர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்துவிட்டனர்...

'கொலை விழுக போவுது'. ஜல்லிக்கட்டுக்காக பிரபல இயக்குனர் எழுதிய கவிதை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போராட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஆளும் அரசுகள் திணறி வருகின்றன.

ஜி.வி.பிரகாஷின் 'கொம்புவச்ச சிங்கமடா'. ஜல்லிகட்டு பாடல் வரிகள்

ஜல்லிக்கட்டு பிரச்சனை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ்  எழுதிய பாடிய 'கொம்பு வச்ச சிங்கமடா' பாடல் சற்று முன் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. பாடலின் வரிகளை கேட்கும்போதே நரம்பு முறுக்கும் வகையில் உள்ள இந்த பாடலின் வரிகள் இதோ...