அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை!

தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4 ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4 ஆம் தேதி நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பான அறிக்கையையும் அக்கட்சி இன்று வெளியிட்டு உள்ளது.

இந்த நேர்காணலில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் அதிமுக நாளை அனைத்து பேச்சு வார்த்தையையும் இறுதி செய்துவிடும் எனவும் நம்பப்படுகிறது. தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படும் நிலையில் மிக விரைவாக வரும் 4 ஆம் தேதி விருப்ப மனு குறித்த நேர்காணலும் முடிவு செய்யப்பட்டு மீண்டும அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.