close
Choose your channels

நயன்தாராவின் 'ஐரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, February 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது. எனவே இந்த ஆண்டு ஐந்து மாதங்களில் மூன்று நயன்தாரா படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.