ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு. சிபிஐ, அமலாக்கத்துறை ஆலோசனை

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் டெல்லி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இந்த தீர்ப்பு மாறன் சகோதரர்களுக்கு நிரந்தர ஆறுதலை அளிக்காது என்று கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் சட்டவிரோத முதலீடுகள் செய்ய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதியளித்தது குறுத்து அவர் தொடர்ந்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தயாநிதி மாறன் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த வ‌ழக்கில் வழங்கப்படும் தீர்ப்பே முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாநிதி மாறன், நீதித்துறை மீது தான் வைத்திருந்த நம்பிக்கை நிரூபணமாகியுள்ளதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த திமுகவினர் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்

More News

விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கமல் எழுதிய கவிதை

நேற்று கர்நாடக மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது அவருக்கு உதவாமல் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோர்களுக்கு எழுந்த கண்டனங்கள் குறித்து பார்த்தோம் அல்லவா

விஷால் சஸ்பெண்ட் ரத்து. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

ஜெயம் ரவியின் 'போகன்' முதல்நாள் சென்னை வசூல் நிலவரம்

'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி-அரவிந்தசாமி கூட்டணி இணைந்து நடித்த படமான 'போகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிம்பு..

சகலகலா வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான சிம்பு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

மீண்டும் ஒருமுறை கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டம்

சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்களின் கூட்டம் தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை பீட்டா என்ற கொடிய அமைப்பிடம் இருந்து மீட்டு தந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் வெற்றி காரணமாக இனி எந்த பிரச்சனைக்கும் மாணவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் தோன்றியது...