ஐஸ்வர்யாவின் காதலர் கோபியின் அதிர்ச்சி கிரிமினல் பின்னணி

  • IndiaGlitz, [Monday,October 01 2018]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையளார்களின் ஒட்டு மொத்த அதிருப்தியையும் சம்பாதித்த ஒரே ஒரு போட்டியாளர் உண்டென்றால் அது ஐஸ்வர்யா தத்தா தான். அது மீறி கோப படுவது ஆரம்பத்தில் சின்ன வயது பையனான ஷாரிக்கிடம் காதல் வலை வீசியது பாலாஜி மீது குப்பை கொட்டுவது போன்ற அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம். எப்படியோ பல முறை பிக் பஸ்ஸின் தயவினால் வெளியேறாமல் தப்பித்து நேற்றைய இறுதி சுற்றில் இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். 

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று ஒரு பகீர் செய்தி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் ஐஸ்வர்யாவின் காதலர் என்று சொல்ல படும் கோபி என்பவர் 2016 ல் கோடி கணக்கில் பண மோசடி செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின் பல மாதங்கள் கழித்து வெளியே வந்தவர் என்று கூறப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன் வாங்கி தருவதாக சொல்லி ஒரு லட்சம் வரை முன் பணமாக பெற்று பின் கம்பியை நீட்டியிருக்கிறார். மேலும் ஆச்சி என்ன என்றால் ஐஸ்வர்யாவியும் நளினி என்பவரும் அந்த கம்பெனிகளில் பங்கு தாரர்கள் என்று பாதிக்க பட்டவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் விருப்ப பட்டவர்களிடம் போனில் பேச அனுமதிக்க பட்ட பொது ஐஸ்வர்யா கோபியிடம் தான் பேசினார் நளினி எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்.  மேலும் ஐஸ்வர்யா மோதிர விரலில் கோபி என்று பச்சை குத்தி இருப்பதும் சான்றாக காட்டப்படுகிறது. 

மேலும் அந்த கட்டுரையில் கோபி தன்னுடைய செல்வாக்கை பயன் படுத்தி ஐஸ்வர்யாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்ததாகவும் அதில் அவர் பிரபலம் அடைந்தவுடன் அதன் மூலம் வெளி நாடுகளில் நட்சத்திர நிகழ்ச்சிகள் நடத்தி காசு பார்க்க திட்டம் தீட்டியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எது எப்படியோ இனி பத்திரிகைக்காரர்கள் ஐஸ்வர்யாவையும் கோபியையும் தேடி சென்று விவரங்கள் கேட்பார்கள் அப்போது உண்மை என்ன என்பது தெரிய வாய்ப்பிருக்கிறது.