'சர்வம் தாளமயம்' 2வது சிங்கிளை வெளியிடும் சர்வதேச பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி மற்றும் வெளியிடும் பிரபலம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று சர்வதேச அளவில் புகழ் பெற்றவரும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார். ராஜீவ் மேனன் இயக்கிய 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

More News

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த அடுத்த படமான 'துப்பாக்கி முனை' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதமே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு

இரும்பு பெண்மணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு இதே டிசம்பர் 5ஆம் தேதிதான் காலமானார். அவருடைய இரண்டாவது நினைவு தினத்தை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

நாளை 'விஸ்வாசம்' டீசரா? பிரபல திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை தகர்த்தது