close
Choose your channels

முன்னணி நடிகையின் வில்வித்தை பயிற்சி… குவியும் லைக்குகள்!

Friday, February 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வில்வித்தை செய்வது போல ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். “முதல் முறையாக முயற்சி செய்கிறேன்“ எனக் குறிப்பிட்டு இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“காக்கா முட்டை” படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தொடர்ந்து தனது திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும் இவர் தேர்வு செய்யும் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

“நம்ம வீட்டு பிள்ளை”, “தர்மதுரை“, “செக்க சிவந்த வானம்“, “வானம் கொட்டட்டும்”, “வடசென்னை” போன்ற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் பேசப்பட்டன. அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இவரின் “கனா” படமும் வெற்றிப் பெற்றது. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகை என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த “வோர்ல்ட் பேமஸ் லவ்வர்“ படம் தெலுங்கில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.