விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நாயகி ஒருவர் இணைந்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக ரிதுவர்மான நடித்து வரும் நிலையில் மனிதன், தர்மதுரை உள்பட பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திற்காக ஸ்க்ரீன் டெஸ்ட்டை முடித்துவிட்டதாகவும், மிக விரைவில் அவர் இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்து வருவது தெரிந்ததே.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், ஜாமோன் ஜான் ஒளிப்பதிவில் ப்ரவீண் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. க்ரைம் த்ரில் படமாக உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. டெல்லி தமிழ் மாணவரின் தந்தை பேட்டி

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து கொண்டிருந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை எழுப்பியது. மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றிருப்பதாகவும், பிī

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்

பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு&#

கமல் பேட்டிக்கு வைகைசெல்வன் எதிர்ப்பு, நாஞ்சில் சம்பத் ஆதரவு.. என்ன நடக்குது சசிகலா அணியில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் யாருக்காக வாக்கு அளித்தார்களோ அவர் இன்று இல்லை என்பதால் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா ஆதரவாளரும், தமிழக அமைச்சருமா&#