வருத்தப்படமா இதைச் செய்யுங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எதை பரிந்துரைக்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு ஒரு பரிந்துரையையும் கொடுத்துள்ள நிலையில் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் ‘பண்ணையாரும் பத்மினியும்‘, ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘செக்க சிவந்த வானம்’, ‘வடசென்னை’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘தர்மதுரை’ போன்ற திரைப்படங்களின் நடிப்புக்காக ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறார்.

மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ‘கனா’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் முக்கிய அடையாளத்தைப் பெற்றார். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘ஃபர்ஹானா’, ‘தீராகாதல்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘சொப்பன சுந்தரி’ என்று அடுக்கடுக்கான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படி அடுக்கடுக்கான வெற்றிகளுக்கு மத்தியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலேசியா நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள மேலகா என்ற இடத்திற்கு சென்ற அவர் விதவிதமான உணவுகளை ருசிப்பார்த்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைத் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘சாக்கு இல்லாத வாழ்க்கை. எந்த வருத்தமும் இல்லாமல் பயணம் செய்யுங்கள்‘ என்று ரசிகர்களுக்கு பரிந்துரைத்து இருககிறார். இந்தப் பரிந்துரையைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருடைய கருத்தை ஆமோதித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இந்திய மருமகனாக மாறிய எலான் மஸ்க்… AI சேட்டையால் வைரலாகும் புகைப்படம்!

உலகப் பிரபலங்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது இந்திய மருமகனைப் போன்று உடையணிந்திருக்கும் புகைப்படம்

இந்த அவுட்ஃபிட் ஓகே-வா? நடிகை மாளவிகா மோகனன் புகைப்படத்திற்கு ரசிகர்களின் தாறுமாறான பதில்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் சுற்றுலா சென்றுள்ள நிலையில்

நம்ம PS- நாயகி வானதிக்கு பிறந்தநாள்... அவருக்குள் இத்தனை திறமையா? ஷாக்கான ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலா

ஹீரோவாகிறார் பிக்பாஸ் 6 போட்டியாளர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக உள்ளார் என்றும் அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

'என் ரசிகரின் அம்மா, என்னோட அம்மா மாதிரி': சூரியின் நெகிழ்ச்சி வீடியோ..!

'என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி' என சூரி நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.