சசிகுமார்-ஹன்சிகா படத்தில் இன்னொரு பிரபல நாயகி

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் 'கொடிவீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி சிவகெங்கை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் அண்ணன் - தங்கை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் என்றும், சசிகுமாரின் தங்கையாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் , தங்கை வேடத்தை ஏற்றதற்கு காரணம், இந்த படத்தின் கதையில் தங்கை கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் என்று கூறப்படுகிறது.
ரகுநந்தன் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ் புகார்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு திரை நட்சத்திரமாக மட்டுமின்றி அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்து வருகிறார்

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிப்பது உண்மையா? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும்

அஜித்-விஜய்: டான்ஸில் யார் பெட்டர்? காஜல் அகர்வால் அளித்த பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கும்.

சென்னையில் பிரபல கார் ரேஸ் வீரர் மனைவியுடன் மரணம்

தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீரர் அஸ்வின் சுந்தர் சென்னை மெரீனா அருகே நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்

உலக அளவில் 11வது இடத்தை பிடித்தது 'பாகுபலி 2'

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதை பார்த்தோம்