close
Choose your channels

சினிமாவை அடுத்து விளையாடுத்துறையில் காலடி வைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

Saturday, July 13, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். விரைவில் அவர் ஒரு புதிய படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சினிமாவை அடுத்து விளையாட்டு துறையில் காலடி வைத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். 

இம்மாதம் 25ஆம் தேதி முதல் டெல்லியில் 2019ஆம் ஆண்டுக்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதில் சென்னை, டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கலந்து கொள்ளவுள்ளன

இந்த நிலையில் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளராக ஐஸ்வர்யா தனுஷ் இணைந்துள்ளார். இந்த அணிக்கு சமீர் பரத்ராம் அவர்களும் ஒரு இணை உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை லயன் அணியில் ஷரத், மதுரிகா, டியாகோ, பெட்ரிசா, அனிர்பன்கோஷ் மற்றும் யாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா தனுஷின் சென்னை லயன் அணி இந்த ஆண்டின் சாம்பியன் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz