சேர்ந்து நடித்தால் நட்பு பாதிக்கும்: ஐஸ்வர்யா தத்தா

  • IndiaGlitz, [Wednesday,October 16 2019]

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருந்தாலும் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் உள்ளனர். இன்றுவரை இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து ஒன்றாகவே வெளியில் சென்றும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதும் இருவரும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது. நல்ல கதை கிடைத்தால் இருவரும் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டும் இருந்தனர். ஆனால் தற்போது ஒரே படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஐஸ்வர்யா தத்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒரே படத்தில் இருவரும் நடித்தால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அது தங்கள் நட்பை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இருவரும் நீண்டநாள் தோழிகளாக இருக்க, இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க முடிவு செய்ததாகவும் ஐஸ்வர்யா தத்தா கூறினார்.

மேலும் யாஷிகா நடித்த ’ஜாம்பி’ படத்தை சமீபத்தில் பார்ப்பதாகவும் அந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் யாஷிகா கஷ்டப்பட்டு தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஐஸ்வர்யா தத்தா மேலும் கூறினார்.

More News

எனக்கா தமிழ் தெரியாது! ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி

சேரன் புனிதமானவரா? மீராமிதுனின் லேட்டஸ்ட் சர்ச்சை வீடியோ

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மீராமிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் முகின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நிலையில் தற்போது சேரன் விவகாரம் குறித்த

புத்தரும் அப்துல் கலாமும் ஒன்றுதான்: கமல்ஹாசன்

உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அரசியல் கூட்டங்கள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடையேயும் அவ்வபோது பேசி வருகிறார்

ரஜினி-சிறுத்தை சிவா படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ஒருசில நாட்களிலேயே அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துவிட்டது

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சதீஷை அடித்த சாக்சி அகர்வால்

ஆர்யா, சாயிஷா நடித்து வரும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சதீஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்