close
Choose your channels
Kaatrin Mozhi

எவிக்சன் பட்டியலில் சிக்குகிறார் ஐஸ்வர்யா? தயாரா மக்களே!

Monday, September 3, 2018 • தமிழ் Comments

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பட்டியல் நடைபெறும் நிலையில் இந்த வாரம் நடந்த எவிக்சன் பட்டியல் குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஐஸ்வர்யா எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை ஜனனி மற்றும் ரித்விகா நேரடியாக கமல்ஹாசனிடம் ஒரு குற்றச்சாட்டாக முன் வைத்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐஸ்வர்யாவை வீட்டில் உள்ள பெரும்பாலானோர் எவிக்சன் பட்டியலுக்கு தேர்வு செய்கின்றனர். எனவே இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யா இடம் பெறுவது உறுதி. ஆனால் ஐஸ்வர்யா வெளியேறும் முடிவை எடுப்பது பிக்பாஸ்தான். யாஷிகாவுக்கு சிறப்பு சலுகை கொடுத்து ஐஸ்வர்யாவை மீண்டும் காப்பாற்றலாம், அல்லது ஏற்கனவே செய்தபடி வாக்குகளில் தில்லுமுல்லு செய்தும் அவரை காப்பாற்றலாம். ஐஸ்வர்யாவை வெளியேற்ற மக்கள் தயாராக இருந்தாலும் பிக்பாஸ் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.