close
Choose your channels

மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Tuesday, January 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கனா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. குறிப்பாக ஐஸ்வர்யாவின் அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய நடிப்புக்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்', மற்றும் அரவிந்தசாமி நடித்த 'சதுரங்க வேட்டை' ஆகிய படங்களை இயக்கிய நிர்மல்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய கேரக்டர்களில் உதயசங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்த படம் தெலுங்கில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.