close
Choose your channels

பாய் ப்ரண்டை விட பிரியாணி தான் முக்கியம்.. ஐஸ்வர்யா ராஜேஷின் க்யூட் வீடியோ..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு பாய்பிரண்டை விட பிரியாணி தான் பிடித்தது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் மேலும் கூறியதாவது:

ஓடிடி அல்லது திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த கேள்விக்கு அவர் திரையரங்கம் என்று தெரிவித்துள்ளார்.

ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் படங்களில் ரொமான்ஸ் படங்களே தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

ஹாரர் மற்றும் த்ரில்லர் படங்களில் தனக்கு இரண்டும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இன்டோர் அல்லது லாங் டிரைவ் ஆகியவற்றில் தனக்கு லாங் டிரைவ் செய்வதில் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஸ்தா மற்றும் பீட்சா இவை இரண்டில் பீட்சாதான் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

லைவ் ஆக்சன் மற்றும் அனிமேஷன் ஆகியவற்றில் லைவ் ஆக்சன் தான் தன்னை கவர்ந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் வெளிநாட்டு படங்கள் மற்றும் இந்திய படங்கள் ஆகிய இரண்டில் தனக்கு இந்திய படங்கள் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பயணம் செய்யும்போது பயணியாக அல்லது டிரைவராக என்ற கேள்விக்கு டிரைவர் சீட் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

கடைசியாக பாய் பிரண்ட் அல்லது பிரியாணி இரண்டில் எது பிடிக்கும் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் பிரியாணியை தேர்வு செய்துள்ளார்.

இந்த வீடியோவின் கேப்ஷனாக அவர், ‘பாய் பிரண்ட் இல்லைனா என்ன நம்மளுக்கு பிரியாணி தான் முக்கியம்’ என்று கூறி அனைவருக்கும் தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை முரட்டு சிங்கிள்ஸ் ரசித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.