அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,February 13 2023]

அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி வெளியான ’டிரைவர் ஜமுனா’ என்ற திரைப்படம், அதன் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ அதற்கு அடுத்த வாரமே வெளியான ’ரன் பேபி ரன்’ ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டும் இன்றி வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ’சொப்பன சுந்தரி’ என்ற திரைப்படம் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, ‘மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ ’இடம் பொருள் ஏவல்’ ’ஃபர்ஹானா’ ’துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களும் இந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ‘லாக்கப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ல்ஸ் கேர்ள் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

More News

தாலி கட்டும்போது என்ன ஒரு வெட்கம்..? விஜய் டிவி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள்..!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளியான பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் அவர் வெட்கப்படும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை: மீண்டும் நயனை வம்புக்கு இழுத்தாரா மாளவிகா மோகனன்?

ஏற்கனவே நயன்தாரா நடித்த  திரைப்படத்தின் காட்சி ஒன்றை கடுமையாக விமர்சனம் செய்த மாளவிகா மோகனன் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருப்பது

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.. வைரல் வீடியோ

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜவஹர் மித்ரனின் அடுத்த படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.. வைரல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன்