close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

Friday, August 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்டாக ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர், ரகுல் ப்ரித்திசிங் ஆகிய மூன்று நடிகைகள் இணைந்தனர்.

இந்த நிலையில் கால்ஷீட் தேதி பிரச்சனையால் ஐஸ்வர்யா ராஜேஷ் 'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு பதில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் சித்தார்த், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக், நெடுமுடி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.