தமன்னாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் உதவி!

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடிப்பில் இந்த ஆண்டில் ஏற்கனவே 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் தற்போது விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு ஆக்சன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் அவர் சமீபத்தில் 'பெட்ரோமாக்ஸ்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமன்னா, யோகிபாபு, காளிவெங்கட் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் டேனி ரெய்மண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இதில் ஈகிள்ஸ் ஐ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இந்த போஸ்டரை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமன்னா படம் ஒன்றின் இரண்டாவது லுக்கை வெளியிட்டு உதவி செய்யும் ஐஸ்வர்யாராய்க்கு தமன்னா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More News

தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி  பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழ் சினிமா உலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது திருட்டு டிவிடி மற்றும் சட்டவிரோதமாக ஆன்லைனில் படம் வெளியிடுவது