இவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா? விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கியது என்பதும் நேற்று மாலை நடந்த அவரது இறுதி சடங்கிற்கு ஏராளமான திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விவேக்கின் நினைவலைகளை அவருடன் நடித்த நடிகர்களும் பழகிய நட்சத்திரங்களும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் விவேக் தன்னை பாராட்டிய பழைய டுவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் ஒன்றை விவேக் பதிவு செய்து ’இவர் தான் காக்கா முட்டை படத்தில் நடித்தவரா? என்ற ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி ‘என்ன ஒரு மாற்றம்? அழகு மற்றும் திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமைந்த ஒரு நடிகை’ என்று பாராட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

More News

விவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தினார்கள் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று இறுதி மரியாதை

அஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்!

அஜீத், சூர்யா உள்பட ஒருசில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

விவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

நடிகர் விவேக் நேற்று காலமான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்!

விவேக்கின் ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் ரசிகர்கள் சபதம் ஏற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உங்கள் பாராட்டுக்கு நன்றி, ஆனால் அது போலி கணக்கு: சமந்தாவுக்கு ஷாக் தந்த பவித்ரா!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா சமீபத்தில் சமந்தா போலவே காஸ்டியூம் அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்கள் வைரலானது