சற்றுமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்து வருவது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே வர வேண்டுமென்றால் டபுள் மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள்.

முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம், நாட்டையும் காப்போம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல நல்ல திரைப்படங்களின்

மேலும் ஒரு புதுவகை கொரோனா? காற்றில் வேகமாகப் பரவுவதாகப் பகீர் தகவல்!

கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றும் வரை சற்றும் குறையாமல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது

தயவுசெய்து உதவி செய்யுங்கள்: விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை உடனடியாக கவனியுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வைத்த வேண்டுகோள்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி புதிய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வேண்டுகோள்களையும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் விடுத்து

இயக்குனர் விஜய் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்

அஜித் நடித்த 'கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் 'மதராசப்பட்டினம்' 'தெய்வத்திருமகள்' 'தலைவா' 'சைவம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர்