close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினியின் 'பயணி': மியூசிக் ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ’பயணி’ என்ற மியூசிக் ஆல்பத்தை இயக்கி வந்தார் என்பதும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவானது என்பதும் தெரிந்ததே.

இந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு மற்றும் டீஸர் குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பதும் இந்த ஆல்பத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபுதேவா, குஷ்பு, சுகாசினி உள்ளிட்ட பல பிரபலங்கள் ஐஸ்வர்யா ரஜினிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோக்களும் வைரலாகின.

இந்த நிலையில் சற்று முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ’பயணி’ மியூசிக் ஆல்பம் நாளை மாலை 4. 44 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். எனது இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாளை ’பயணி’ ஆல்பம் வெளியாகிறது என்றும் உங்கள் அனைவரின் ஆசியும் தேவை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

’பயணி’ மியூசிக் ஆல்பத்தின் தமிழ் பதிப்பை அனிருத் பாடியுள்ளார் என்பதும், அன்கிட் திவாரி இசையமைத்துள்ளார் என்பதும், விவேகா பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.