சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால் சலாம்': செம அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’லால் சலாம்’ படம் குறித்த செம அப்டேட்டை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்து, வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படம் ’லால் சலாம்’.

இந்த படம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது என்பதும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் ஒரு இஸ்லாமிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் செட் ஒர்க் பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் அது குறித்த பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அண்ணாமலையார் அருள் ஆசியுடன் செட் ஒர்க் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செட்வொர்க் பூஜை குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார். செட்வொர்க் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

More News

என் கணவர் வேறு யாருக்காவது புரபோஸ் செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்: தமிழ் நடிகை..!

எனது கணவர் வேறு எந்த பெண்ணுக்காவது புரபோஸ் செய்தால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என தமிழ் நடிகை ஒருவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'துணிவு' படத்தை அடுத்து ஷாலினி அஜித் மகளுடன் பார்த்த படம்.. வைரல் வீடியோ

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் அந்த படத்தை தனது மகள் அனோஷ்கா மற்றும் தங்கை ஷாமிலியுடன் ஷாலினி அஜித் பார்த்தார் என்பதும்

விஜய்யின் 'லியோ': லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

'லியோ' பாணியில் 'ஏகே62': சுபாஷ்கரனிடம் ஒப்புதல் வாங்கிவிட்டாரா மகிழ்திருமேனி?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதேபோல் 'ஏகே 62' படத்தின் டைட்டிலையும் புரோமோ வீடியோ உடன்

மூளைமாற்று அறுவை சிகிச்சை கதையா? 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரைலர்..!

 விஜய் ஆண்டனி நடித்த இயக்கியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.