கபில்தேவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ரஜினிகாந்த் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில் நேற்று இந்த படத்தில் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

மேலும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கபில்தேவ் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்ததோடு, ’இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு பெருமையும் பாக்கியமும் ஆகும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கபில்தேவ் நடிக்க வேண்டிய காட்சிகளை அவருக்கு விளக்கிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் விக்ராந்த் நடிக்க வேண்டிய காட்சியை விளக்கும் புகைப்படம் மற்றும் மொய்தீன் பாய் கெட்டப்பில் இருந்த ரஜினியுடன் அவர் உரையாடும் புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

‘லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் நிலையில் அவருடன் கபில்தேவ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இது ஒரு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஓடும் பேருந்தில் சுய இன்பம் செய்த இளைஞர்.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த நடிகையின் அதிரடி நடவடிக்கை..!

ஓடும் பேருந்தில் நடிகையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீர் என சுய இன்பத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த நடிகை எடுத்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கருப்பு நிறத்திலும் க்யூட்டான பேஷன் லுக்… வைரலாகும் பீஸ்ட் நாயகி புகைப்படம்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகை பூஜா ஹெக்டே ...

நான் ஹார்மோன் ஊசி போட்டேனா? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி சிறுவயது முதலே தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கேள்விக்குப் பதிலளித்துள்ளார்

விஜய்க்கு அப்பாவாக நடிப்பது இந்த பிரபலமா..? 'லியோ' குறித்த ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் ஒருவர் விஜய்க்கு அப்பாவாக நடித்து வருவதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேன்ஸ் விழாவில் அணியும் உடையா இது? ரஜினி, விஜய் பட நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.