7 வருட இடைவெளி ஏன்? தனுஷின் பிரிவுக்கு பின் மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2015ஆம் ஆண்டு ’வை ராஜா வை’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ’வை ராஜா வை’ படத்திற்கு பிறகு ஏழு வருட இடைவெளி ஏன் என்பது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார். ‘வை ராஜா வை’ படம் ரிலீஸ் ஆன பிறகு தனக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து படங்கள் இயக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அப்போது குழந்தைகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால் தன்னால் அந்த படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டதால் தனது இயக்குனர் பணியை மீண்டும் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் பாலிவுட் பிரபல நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் ஆகியோர்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் ராகவா லாரன்ஸை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ளதை அடுத்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தலைவர் 169'  பட இயக்குனர் மாற்றமா? நெல்சனின் பரபரப்பு பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தை நெல்சன் இயக்குவார் என்றும் நெல்சன் இயக்க மாட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில்

பிரபல இயக்குநருக்கு நன்றி தெரிவித்த இளம் நடிகை… வைரலாகும் உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து திறமையான நடிகை எனப்பெயர் பெற்ற நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கூகுள் குட்டப்பா'!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த 'கூகுள் குட்டப்பா' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நள்ளிரவில் திடீரென பிரபல இயக்குனருக்கு போன் போட்ட ரஜினிகாந்த்: என்ன காரணம்?

 பிரபல இயக்குனருக்கு நள்ளிரவில் திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் போட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளரா இளையராஜா? பாஜகவின் வியூகத்தால் திமுகவுக்கு சிக்கலா?

இசைஞானி இளையராஜா குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய ஜனாதிபதி வேட்பாளராக இளையராஜா நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக