பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு: ரஜினி மகள் இயக்குகிறாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளை பார்ப்பதற்காக தனது இரண்டு மகன்களுடன் கொல்கத்தா சென்று உள்ளார். அப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் இரவு டின்னருக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தை இயக்குகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடித்த ’3’ கவுதம் கார்த்திக் நடித்த ’வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது 'ஓ சாதிசால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கங்குலி படத்தை இயக்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட ஒருசில பிரபல நடிகர்கள், கங்குலி வேடத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

டி. ராஜேந்தருக்கு என்ன ஆச்சு? சிம்பு விளக்க அறிக்கை!

இயக்குனரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும்

மும்பையில் 'வீட்ல விசேஷங்க' டிரைலர்: ஆர்ஜே பாலாஜிக்கு இது 3வது முறை!

ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷங்க' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் ஐபிஎல் போட்டியின்போது ஒளிபரப்ப இருப்பதாகவும் இதற்காக மும்பை சென்றிருப்பதாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார் .

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்: செம ரொமான்ஸ் வீடியோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாவில்

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா இந்த பிரபல நடிகை? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா: இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்