close
Choose your channels

வாவ், செல்வா அத்தான்: செல்வராகவனை பாராட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருவது மட்டுமின்றி ’பீஸ்ட்’ ’சாணிகாகிதம்’ உள்பட ஒரு சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’சாணிகாகிதம்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் ’சாணிகாகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் சில மணி நேரங்களுக்கு முன் வெளியாகிய நிலையில் அதில் செல்வராகவன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு டெர்ரராக இருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டருக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த போஸ்டருக்கு தனது கமெண்ட்ஸை பதிவு செய்துள்ளார். அதில் ’வாவ், செல்வா அத்தான்’ என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

கணவர் தனுஷை பிரிவதாக சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்த போதிலும் அவர் செல்வராகவன் மீது இன்னும் ஒரு மரியாதை கலந்த பாசத்துடன் இருக்கிறார் என்பது இந்த கமெண்ட் மூலம் தெரியவருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே செல்வராகவன் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வாழ்த்தை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.