எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ!

பிரபல பாலிவுட் ஹீரோக்கள் தென்னிந்திய படங்களில் நடிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துவரும் பிரம்மாண்டமான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’ இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான அலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல ஹீரோ அஜய் தேவ்கான் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தின் இந்தி ரீமேக் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் அவரது படத்தில் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜய்தேவ்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக அதிகாரபூர்வமாக ’ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் இந்தப்படத்தில் பிரபலங்கள் இணைந்து கொண்டு வருவதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

கடந்த சில ஆண்டுகளாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு

ரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவரது நடிப்பு மட்டும் ஒரு காரணம் அல்ல, அவர் தன்னுடைய ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அளவில்லா

தோல்வியிலிருந்து வெற்றி பெற்ற உலகப் பிரபலங்கள்

நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கான குறிப்புகளைச் சமூக வலைத்தளங்கள், மருத்துவர்கள் எனப் பல இடங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறோம்.

அட லூசு பசங்களா! ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு குஷ்பு பதிலடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை ஐந்து நிமிடம் அளித்த செய்தியாளர்கள் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்

பெரியார் குறித்து அவமரியாதையாக ரஜினிகாந்த் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.