close
Choose your channels

அஜய் ஞானமுத்துவின் அடுத்த பட ஹீரோ இவரா? 

Sunday, July 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி’ நயன்தாரா நடித்த ’இமைக்காநொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. இந்த படத்தில் நாயகனாக நடிக்க மீண்டும் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் விக்ரம் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘கோப்ரா’ ரிலீசுக்கு முன்னரே இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.