close
Choose your channels

அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா? பூஜா ஹெக்டேவுடனும் ஒரு புரொஜக்ட்..!

Friday, April 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோவாக மாஸ் நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி நடிகை பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ஒரு வெப் தொடரையும் அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து அதன் பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ விக்ரம் நடித்த ’கோப்ரா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ’டிமான்டி காலனி 2’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் நடிகை பூஜா ஹெக்டே உடன் இணைந்து ஒரு வெப் தொடரையும் அஜய் ஞானமுத்து இயக்க இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. ஜூனியர் என்டிஆர் படமா? அல்லது பூஜா ஹெக்டேவின் வெப்தொடரா? இரண்டில் எதை அவர் முதலில் தொடங்குவார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.