முதல் திருமண நாளில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட்.. அஜய்-ஜெஸ்ஸி தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

சூப்பர் சிங்கர் பாடகர் அஜய் மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியதோடு, குழந்தையுடன் கூடிய சூப்பர் போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா. இவர் ஜெஸ்ஸி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே ஜெஸ்ஸி கர்ப்பமானதை அறிவித்த நிலையில் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது ஜெஸ்ஸி மற்றும் அஜய் ஆகிய இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது அஜய் - ஜெஸ்ஸி தம்பதிகள் முதலாவது திருமண நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தனர்.

நாங்கள் முதல் திருமண நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறோம், எங்கள் குழந்தைக்கு நாங்கள் அயன் ஜேடன் என்ற பெயர் வைத்துள்ளோம், இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்களுக்கு அனைவரது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் தேவை’ என்று பதிவு செய்துள்ளனர் குழந்தைகளுடன் கூடிய அம்சமான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

எளிமையான தோற்றத்தால் வசீகரித்தவர்… பாலிவுட் நடிகையின் கேன்ஸ் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொழில் அதிபராகவும் இருந்துவரும் நடிகை ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படம்

முதல் இந்தியர் இவர்தான்… மிரள வைக்கும் விராட் கோலியின் சோஷியல் மீடியா சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்து தற்போது முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி

கோமாளிகள், சோம்பேறிகள், முட்டாள்கள்: கோவிலுக்கு சென்ற இளம் பெண்களை திட்டிய கங்கனா..!

அரைகுறை ஆடையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத், 'சோம்பேறிகள், முட்டாள்கள் என திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் நிறைவு விழாவில் பாட்டு பாடும் 'அரபிக்குத்து' பாடகி..! அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் நிறைவு விழாவில் 'அரபிக்குத்து' உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகி பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக

'ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.. லவ் யூ பார்ட்னர்.. விஜய் டிவி ஜாக்குலின் வெளியிட்ட வீடியோ வைரல்..!

விஜய் டிவி ஜாக்குலின் தனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.