close
Choose your channels

இந்த நடிகையின் பிறந்தநாளில் 'அஜித் 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீசா?

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’அஜித் 61’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மறைந்த பிரபல நடிகையின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அஜித் 61’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதில் அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் திரும்பிய பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ’அஜித் 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.