இந்த நடிகையின் பிறந்தநாளில் 'அஜித் 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீசா?

  • IndiaGlitz, [Wednesday,July 06 2022]

அஜித் நடித்து வரும் ’அஜித் 61’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மறைந்த பிரபல நடிகையின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அஜித் 61’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதில் அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் திரும்பிய பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ’அஜித் 61’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'நந்தினி' கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்: வேற லெவலில் வைரலாகும் 'பொன்னியின் செல்வன்' போஸ்டர்!

பிரபலை இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு

இன்று அடுத்தடுத்து ஐந்து அப்டேட்கள்: சினிமா ரசிகர்களுக்கு செம குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த திரையுலகம் தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது.

ஒருநாள் இவர் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்: அனிருத் பாராட்டிய நபர் யார் தெரியுமா?

'பொறுத்திருந்து பாருங்கள், இவர் ஒரு நாள் நிச்சயம் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்' என அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் 'விக்ரம்' பட உதவி இயக்குனர் ஒருவரை பாராட்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி

மீண்டும் பிரமாண்டம்: ஷங்கர் இயக்கிய பாடலில் இத்தனை நடனக்கலைஞர்களா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஷங்கர் என்றால் பிரமாண்டம், பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று தான் கூறபட்டு வருகிறது. குறிப்பாக அவரது படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும்

விஜய்சேதுபதியா? வில்லன் சேதுபதியா? மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் வில்லன்?

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.