'அஜித் 61' படத்தின் அட்டகாசமான லுக்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,March 09 2022]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறியுள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக போனிகபூர் சென்னைக்கு வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று பூஜை முடிந்தவுடன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதுவொரு வங்கிக்கொள்ளை குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக அவர் ஸ்டைலிஷ் ஆக நீண்ட தாடி வளர்த்து இருப்பது போன்ற நெகட்டிவ் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை அடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் நீண்ட தாடி, கோட் சூட் மற்றும் சன் கிளாஸ் என செம ஸ்டைலிஷாக காணப்படுகிறார். ’அஜித் 61’ படத்தின் கெட்டப்புடன் அஜித் உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்: மகளிர் தினத்தில் பூஜை

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்பட ஒரு சில நடிகைகளே நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஐஸ்வர்யா

விஜய் ரசிகரை பாராட்டிய அஜித் ரசிகர்!

விஜய் ரசிகரின் செயலை அஜித் ரசிகர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாளவிகா மோகனின் மகளிர் தின கொண்டாட்டம்: யாருடன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் மகளிர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

மைசூர் காட்டில் ஆக்சன் காட்சிகள்: கார்த்தியின் அடுத்த பட அப்டேட்!

நடிகர் கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'விருமன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'சர்தார்'

பிரபாஸ் படத்தின் வில்லனாகும் பிரபல ஹீரோ!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .