'அஜித் 61' படத்தின் பூஜை, படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,March 03 2022]

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வலிமை’ திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாகவும், வினோத் இயக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் அஜீத் வில்லன் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 18 முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை செட் போடப்படும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும், இந்த படத்தின் டைட்டிலும் பூஜை அன்றே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

அசத்தலான அஜித்தின் குடும்ப புகைப்படங்கள்: 'அஜித் 61' படத்தின் மாஸ் கெட்டப்!

அஜீத் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பா ரஞ்சித் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான 'குதிரைவால்' என்ற திரைப்படம் மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்

'வலிமை' பாணியில் 'அஜித் 61' படத்தின் அறிவிப்பு: ரசிகர்கள் குஷி!

அஜித் நடித்த 'வலிமை' படத்தின் பாணியிலேயே அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'அஜித் 61' படத்தின் அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உதயநிதி-மாரி செல்வராஜ் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

உதயநிதி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவரை இணைய உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

உக்ரைனில் மரணம் அடைந்த இரண்டாவது இந்திய மாணவர்: அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட உலக நாடுகள்