'அஜித் 61' படத்தின் டைட்டில் இதுவா? மீண்டும் 'V' செண்டிமெண்ட்?

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் ஒரு பக்கம் திரையரங்குகளில் வசூலை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

’அஜித் 61’ படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதியும் மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படத்திற்காக பிரமாண்டமாக சென்னை அண்ணா சாலை செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் டைட்டிலை அந்த படத்தின் பூஜை அன்றே படக்குழுவினர் அறிவித்தது போலவே இந்த படத்தின் டைட்டிலையும் பூஜை அன்றே அறிவிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் டைட்டில் ’வல்லமை’ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் வீரம், விவேகம், விஸ்வாசம், வலிமை, என ’V’ சென்டிமென்ட்டில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதே வரிசையில் தற்போது ’வல்லமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

லெஜண்ட் சரவணன் படத்தின் மோஷன் போஸ்டர்- டைட்டில் அறிவிப்பு!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணா நடிப்பில், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

உதயநிதி-மாரி செல்வராஜ் பட டைட்டில் அறிவிப்பு: ஹீரோயின் இவரா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில்

கலாய்த்தவர்களின் வாயை ஒரே போஸ்ட் மூலம் பதிலடி கொடுத்த கிரேஸ் கருணாஸ்!

தனது உருவத்தை கேலி செய்து கலாய்த்தவர்களை ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பதிலடி கொடுத்த கிரேஸ் கருணாஸ் பதிவு வைரலாகி வருகிறது.

காதல் சின்னத்தின் முன் ரொமான்ஸ் மூடில் செல்வராகவன்: வைரலாகும் செம புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் காதல் சின்னமான தாஜ்மஹால் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அன்று சாதாரண ஊழியர், இன்று நாட்டின் கெளரவம்: 22 ஆண்டுகளில் விஜய்சேதுபதி வாழ்வின் மாற்றம்!

கடந்த 2000ம் ஆண்டில் நடிகர் விஜய்சேதுபதி ஊழியராக இருந்த நாட்டில் இன்று மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.