close
Choose your channels

அஜித்தின் 63வது படத்தை இயக்குவது இவரா? மீண்டும் ஒரு சூப்பர்ஹிட்டா?

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டுள்ள பிரமாண்டமான அண்ணா சாலை செட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை குறித்த படம் என்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ள இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த நிலையில் தற்போது அஜித் நடிக்கவிருக்கும் 63வது படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஏற்கனவே வீரம், வேதாளம் விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் ஒருமுறை அஜித் படத்தை இயக்குவாரா? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.