close
Choose your channels

மீண்டும் 'மங்காத்தா' கேரக்டரில் அஜித்: வேற லெவலில் எச்.வினோத் கதை!

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை அம்சம் குறித்த தகவல் கசிந்துள்ளது. மீண்டும் அஜித்தும் எச்.வினோத்தும் இணையும் கதையில் அஜித்துக்கு நெகட்டிவ் கேரக்டர் என்றும் கிட்டத்தட்ட ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்த கேரக்டரில் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பில்லா, மங்காத்தா போன்ற அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.