ரசிகர் பாடியதை ஆர்வத்துடன் கேட்ட அஜித்.. பெயரை கேட்டதும் ஒரு புன்சிரிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர் ஒருவர் பாடிய பாட்டை பக்கத்தில் நின்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த ரசிகரின் பெயரை கேட்டவுடன் சிரித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ’விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ’குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது கார் ரேஸ் போட்டியில் ஆர்வம் காட்டி வரும் அஜித், சமீபத்தில் நடந்த துபாய் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், தற்போது ஐரோப்பாவில் நடந்து வரும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அஜித்தை ஒரு ரசிகர் சந்தித்து, அவர் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை பாடினார். அவர் பாடும் அழகை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த அஜித், அதன் பின்னர் அவருக்கு கை கொடுத்து, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது, அந்த ரசிகர் “அஜித்” என்று கூறியவுடன், புன்சிரிப்புடன் அவரை கட்டிப்பிடித்தார். இதில் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Latest Video Of THALA #AjithKumar From Dubai! 🌟🇦🇪
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 25, 2025
A Lucky Fan Pays Tribute To AK By Singing A Song From Kandukondain Kandukondain 🎶
What A Moment To Cherish! ❤️#VidaaMuyarchi | #GoodBadUgly pic.twitter.com/b4sS5U4mva
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com