close
Choose your channels

13 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைவாரா ஆஸ்கார் நாயகன்?

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 60' படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் என போனிகபூர் சமீபத்தில் டுவீட் ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் 'தல 60' படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் விரைவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முதல்கட்டமாக இந்த படத்தில் சில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக போனிகபூர்-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் 'தல 60' படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு அஜித் நடித்த 'வரலாறு' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் மீண்டும் 13 வருடங்கள் கழித்து இருவரும் ஒரே படத்தில் இணைவார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அஜித் நடிக்கும் படத்திற்கும் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டால், ஒரே நேரத்தில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் என்ற பெருமையும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.