25வது திருமண நாள்..மாறி மாறி கேக் ஊட்டி விடும் அஜித் - ஷாலினி.. க்யூட் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் மற்றும் ஷாலினி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இந்த க்யூட் வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் சரண் இயக்கத்தில் உருவான ’அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் காதல் உருவானது. இதையடுத்து, கடந்த 2000ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், நேற்றுடன் அஜித்–ஷாலினி தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து, இருவரும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை கொண்டாடினர்.
முதலில் ஷாலினி, அஜித்துக்கு கேக் ஊட்ட, அதன் பிறகு அஜித், ஷாலினிக்கு கேக் ஊட்டும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த க்யூட் வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சிலமணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
What a lovely video 😍#AK and Mrs. #ShaliniAjithkumar
— Ramesh Bala (@rameshlaus) April 25, 2025
Celebrating their 25th wedding anniversary ❤️ 💕 pic.twitter.com/xIuNlFfzji
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com