close
Choose your channels

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள்: விஜய், அஜித் பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Saturday, August 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு நேற்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து உள்ள நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அஜித் நடித்த ’பில்லா’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் வீரேந்திரா செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நமீதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நமிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாங்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் ஆசியும் அன்பும் அந்த குழந்தைகளுக்கு வேண்டும் என்று நம்புகிறோம்.

குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இந்த குழந்தைகள் பிறந்தது. சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். எனது கர்ப்பகால பயணத்தில் என்னை வழிநடத்தி என் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக உதவி செய்த டாக்டர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு உண்மையிலேயே நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

டாக்டர் ஈஸ்வரன் மற்றும் டாக்டர் வேல்முருகன் ஆகியோர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்கு டாக்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நமிதா பதிவு செய்துள்ளார். நமீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற செய்தி அறிந்தவுடன் அவரது ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.