ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக் பயணம் செய்த தல அஜித்!

  • IndiaGlitz, [Monday,April 20 2020]

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த வரும் ’வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு தல அஜித் பைக்கிலேயே வந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

‘வலிமை’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்தவுடன் அஜித் சென்னைக்கு திரும்ப விமான டிக்கெட் தயாராக இருந்த நிலையில் அஜீத் தனது உதவியாளரிடம் விமான டிக்கெட்டை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு, ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்து உள்ளார். அஜித்தின் உதவியாளர் அவருடைய லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொள்ள, சாலை வழியே அவர் சென்னை வந்தடைந்துள்ளார்.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பது தெரிந்ததுதான் என்பதும் நீண்ட தூரம் பைக் ரைடிங் செய்வதில் அவருக்கு விருப்பம் அதிகம் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த நீண்ட பைக் ரைடிங் அதாவது சுமார் 600கிமீ பைக்கில் பயணம் செய்தது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்த பின்னர் ’வலிமை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்த படத்தில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்கிறார் என்பதும் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடுதிரும்பிய நர்ஸ்க்கு ஆரத்தி வரவேற்பு

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை காப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள்,

கொரோனா விடுமுறையில் 'கொலகொலயாய் முந்திரிக்காய்' விளையாடிய பிரபலம்

கொரோனா விடுமுறை காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.

100ஐ நெருங்கும் ராயபுரம், நெருங்க முடியாத மணலி, அம்பத்தூர்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள்

கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி

கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கொரோனாவுக்கு சென்னை மருத்துவர் பலி: முக ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.