close
Choose your channels

இது எந்த இடம்? அஜித் பைக் பயணத்தின் அட்டகாசமான புகைப்படம்!

Wednesday, October 27, 2021 • தமிழ் Comments

பைக் பிரியரான தல அஜித் கடந்த சில நாட்களாக பைக்கில் நீண்ட நெடும்பயணம் சுற்றி வருகிறார் என்பதும், அவர் ஆங்காங்கே சுற்றுப்பயணம் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் மற்றும் பாலைவனத்தில் தனியாக பைக்கின் நிழலில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மிகப்பெரிய மலை உச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எந்த இடம் என்று தெரியவில்லை என்றாலும் இந்த புகைப்படம் அட்டகாசமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் இன்னும் பல அரிய புகைப் படங்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித் தற்போது நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் அவருடைய அடுத்த படத்தையும் எச். வினோத் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz