close
Choose your channels

புதிதாக திருமணமான நடிகரை விருந்துக்கு அழைத்தாரா அஜித்?

Friday, December 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அந்த நடிகரை தனது வீட்டிற்கு விருந்துக்கு அஜித் அழைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் கார்த்திகேயா என்பதும் இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான லோகிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த திருமணத்திற்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்பட பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணத்திற்கு அஜித் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி கார்த்திகேயாவிடம் போனில் வாழ்த்து தெரிவித்த அஜித், தனது சென்னை வீட்டிற்கு கார்த்திகேயா மற்றும் லோகிதா ரெட்டி விருந்துக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பை கார்த்திகேயா-லோகிதா தம்பதிகள் ஏற்று கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.