அடுத்த கட்டத்திற்கு செல்லும் அஜித்.. 4 வீடியோக்களை வெளியிட்ட சுரேஷ் சந்திரா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித் தற்போது ஐரோப்பிய கார் ரேஸ் சீரிஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த சுற்றுக்கு தயாராக அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. து. அவரது அணி துபாயில் நடந்த கார் ரேஸ் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து, இந்தியாவுக்கே பெருமை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உலக அளவில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் ஜி.4 ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் அஜித் தற்போது கலந்து கொண்டிருப்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட அந்த போட்டியில் கலந்து கொண்ட நேரலை வீடியோவை சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார் என்பதும் நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான போட்டியை எதிர்கொள்ள இருக்கும் அஜித் அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார். தனது பயிற்சியாளர்கள் அளித்த வீடியோ மூலம் பாடத்தை கற்றுக் கொள்வது உள்பட நான்கு வீடியோக்களை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வசூலை செய்துள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Even the game of valour needs precision to practise. Work ethics !!!#AjithKumar #AjithKumarRacing #CircuitDeSpa #EndurancePrep #RacingSpirit pic.twitter.com/q53BaQOI5j
— Suresh Chandra (@SureshChandraa) April 18, 2025
Even the game of valour needs precision to practise. Work ethics !!!#AjithKumar #AjithKumarRacing #CircuitDeSpa #EndurancePrep #RacingSpirit pic.twitter.com/q53BaQOI5j
— Suresh Chandra (@SureshChandraa) April 18, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments