60 நிமிடங்கள்.. துணை டிரைவர் இல்லை.. அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் குறித்த முழு தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் அஜித், ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கடந்த சில மாதங்களாக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது முழு அளவில் கார் ரேஸில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித் தனது அடுத்த படத்தை வரும் நவம்பர் மாதம் தான் தொடங்க உள்ளார் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே, அதுவரை அவர் கார் ரேஸில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அவர் நெதர்லாந்தில் நடைபெறும் GT4 ஐரோப்பிய கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கார் ரேஸ் போட்டியில், அஜித் சோலோவாக 60 நிமிடங்கள் கார் ஓட்ட போவதாகவும், துணை டிரைவர்கள் யாரும் இல்லை என்றும், முழுக்க முழுக்க தன்னம்பிக்கை மற்றும் கடின முயற்சியால் மட்டுமே அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மதியம் 2.35 மணிக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளதாகவும், அதன் பின்னர் இன்று இரவு 9 மணிக்கு ரேஸ் ஒன் மற்றும் நாளை பிற்பகல் 3:40 மணிக்கு ரேஸ் 2 நடைபெறும் என்றும் கூறிய சுரேஷ் சந்திரா, இந்த போட்டிகளை நேரலையில் காண்பதற்கான லிங்கையும் இணைத்துள்ளார்.
இதில் ரசிகர்கள் அஜித்தின் கார் ரேஸை பார்த்து மகிழலாம் என்று அவர் கூறியுள்ள நிலையில், இந்த தகவலுக்கு அஜித் ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பல கார் ரேஸ் போட்டிகளில் நடிகர் அஜித் விருதுகளை குவித்த நிலையில், இந்த போட்டியிலும் அவர் விருதுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Watch today’s race LIVE from Zandvoort!
— Suresh Chandra (@SureshChandraa) May 17, 2025
Ajith Kumar is taking on the GT4 European Series solo – 60 minutes, no co-driver, just pure determination.
Here are the live links for this weekend’s GT4 European Series coverage from Zandvoort.
Qualifying, Sat, 17 May 2025, 02:35 PM… pic.twitter.com/PUz5j2aDUO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com