close
Choose your channels

விஸ்வாசம் பேனர் சரிந்து ஐந்து பேர் படுகாயம்

Thursday, January 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை 1 மணிக்கே முதல் காட்சி ஆரம்பித்துவிட்டதால் விடிய விடிய அஜித் ரசிகர்கள் தூங்காமல் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 'விஸ்வாசம்' வெளியாகும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாஅக பேனர்கள், கட் அவுட்டுக்கள் வைத்து அசத்தி வந்த நிலையில் இன்று அந்த கட் அவுட்டுக்களுக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் என்ற பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக அஜித் ரசிகர்கள் கட் அவுட்டின் மீது ஏறிய போது அந்த கட் அவுட் திடீரென சரிந்தது. இதில் இடுபாடுகளில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுபோன்ற விபரீதங்களை தடுக்க சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வைக்கப்படும் கட் அவுட்டுகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.