ரஜினிகாந்த் மனைவியாக அஜித், தனுஷ் பட நடிகையா? 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ரஜினிகாந்த் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தின் ’துணிவு’ மற்றும் தனுஷின் ’அசுரன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் கதை, போலி என்கவுண்டர் குறித்தது என்றும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் இந்த கதை நடப்பதாக படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ரானா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

என்ன ஆச்சு எமிஜாக்சனுக்கு? லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான 'மதராசபட்டினம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமான எமி ஜாக்சன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ப அதிர்ச்சி அடையும்

நயன்தாராவின் அடுத்த படத்தில் எத்தனை பிரபலங்கள்..? புதிய இணைந்தவர் இவர்தான்..!

பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் 'கண்ணப்பா' என்ற திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். பிரபாஸ் சிவன் கேரக்டரில்,

நியூயார்க் நகர வீதியில் ஜாலியாக சைக்கிள் ரைடிங் செல்லும் த்ரிஷா .. க்யூட் வீடியோ..!

நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு நியூயார்க் நகர வீதியில் சைக்கிள் ரைட்டிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

'காவாலா' காய்ச்சல் இன்னும் ஓயவில்லையா? தப்பு தப்பாய் டான்ஸ் ஆடிய சன்னி லியோன் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் 

விஜய்யின்  'தளபதி 68' பூஜை எப்போது?  படக்குழுவினர் யார் யார்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ'  திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி அவர் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல்